*"நீரிழிவு நோயாளிகளுக்கு பயன்தரும் மருத்துவகுறிப்பு".
நீரிழிவு நோயாளிகள் உடம்பில் அதிகம் நீர்ச்சத்து இழக்காமல், தண்ணீர் தாகம் அதிகம் இல்லாமல், நாவு வறட்சி இல்லாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும். நாம் கீழே குறிப்பிட்டுள்ள உணவுகளை எல்லாம் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.**ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் இவற்றை தொடர்ந்து கொதிக்கவைத்து கசாயமாக சாப்பிடும்பொழுது சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும். இது மிக எளிமையான வழிமுறை ஆகும்.**தேநீர் சாப்பிடக் கூடிய அதே சுவை இதிலேயும் இருக்கும். ஆவாரம்பூ தேநீர் சாப்பிட்டுப் பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.* *இன்னும் சர்க்கரை நோய்க்கு சிறுகுருஞ்சான், நாவல் கொட்டை, மருதம்பட்டை, வேப்பம்பட்டை இவற்றை சம அளவு கலந்து, பொடி செய்து வைத்துகொண்டு காலை, இரவு நேரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலன் இருக்கும்.*

Comments
Post a Comment