சித்தர்கள் வாழ்வியல் சில முறைகள்
யாமறிந்த அனுபவ மருத்துவத்தில் இன்று ஒரு மருந்தில் உடலை காக்க சித்தர்கள் சொன்ன சில முறைகள்... காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் மலச்சிக்கல், வாத உபாதைகள் படிபடியாக நீங்கும், காலை வெய்யிலில் உடலை காய வைத்தால் உடலில் உள்ள நோய்கள் தாக்கம் அதிகமாக இருக்கும், மாலை வெய்யிலில் காய்வதால் உடலில் உள்ள நோய்கள் படிபடியாக குறையும், வாரம் இருமுறை குளிக்கும் நீரில் மூன்று எலுமிச்சம் பழம் சாறு விட்டு மூன்று மணி நேரம் வெய்யிலில் சூடு படுத்தி குளித்து வர உடலில் உள்ள அழுக்கை நீக்கி சருமத்தை மிருதுவாக வைத்து உடலுக்கு ஆரோக்கியத்தை உண்டு பண்ணும், சுடுநீரில் குளிப்பவர்கள் வாரம் மூன்று முறை நூறு கிராம் மிளகை போட்டு தண்ணீரை சூடாக்கி குளித்து வர நெஞ்சுசளி, இருமல், இரைப்பு, நெஞ்சு வலி, நெஞ்சு எரிச்சல், உடல் வலி போன்ற உபாதைகள் படிபடியாக நீங்கும் சித்தர்கள் தன் உடலை நோய்யின்றி காத்த விதங்களில் சில....

Comments
Post a Comment