நன்னாரி
யாமறிந்த அனுபவ மருத்துவத்தில் இன்று ஒரு மருந்து *நன்னாரி*..... இதன் பச்சைவேரை சுமார் 5 கிராம் அளவு எடுத்து மைய அரைத்து பசுவின் பால் கலந்து தினமும் காலை மட்டும் ஒரு வாரம் குடித்து வர உடல் உஷ்ணம், மூலச்சூடு, சிறுநீரக எரிச்சல், நீர்கடுப்பு தீரும், பச்சை வேர் சுமார் 20 கிராம் அளவு எடுத்து சிதைத்து 200 மில்லி தண்ணீர் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் மட்டும் குடித்து வர நீரிழிவு, பித்தம் சம்மந்தப்பட்ட நோய் தீரும், வேரை காய வைத்து சூரணம் செய்து வைத்து கொண்டு தினம் காலை மட்டும் ஒரு சிட்டிகை அளவுக்கு எடுத்து பசுவின் பாலில் கலந்து தொடர்ந்து குடித்து வர இரத்தம் சுத்தமாகும், இதன் இலையுடன் மிளகு பூண்டு சேர்த்து துவையல் செய்து மதிய உணவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருமல், சளி, மலச்சிக்கல் தீரும்

Comments
Post a Comment