நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை வைத்திய முறை

கொத்தமல்லி நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் தெரியுமா ?
பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படும் மிக முக்கியமான பிரச்சனையில் ஒன்றாக நீரழிவு நோய் உள்ளது. இதற்க்காக ஒருவேளை நீங்கள் மாத்திரை எடுத்துக்கொண்டு இருக்கலாம். ஆனால் மருந்து மாத்திரை எதுவும் இல்லாமல் இதனை எளிமையான முறையில் போக்க உதவும் மருந்து குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் :

வர கொத்தமல்லி – 1/2 கிலோ
வெந்தயம் – 1/4 கிலோ

செய்முறை :
முதலாவது வர கொத்தமல்லி, வெந்தயம் போன்றவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வரும் வரை நன்கு வறுத்து கொள்ளவும். பின்பு தனித்தனியாக இவற்றை பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். இந்த பொடியில் இரண்டு ஸ்பூன் பொடியை எடுத்து 2டம்ளர் நீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆகும் வரை நன்கு காய்க்கவும். பின்பு வடிகட்டி மூன்று வேளையும் சாப்பாட்டிற்கு முக்கால் மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட்டு வரவும். இதை குடித்த பிறகு குறைந்தது முக்கால் மணி நேரம் தண்ணீர் தவிர வேறு எதையும் சாப்பிட கூடாது. இப்படி தொடர்ந்து செய்து வந்தால் ஒருமாதத்தில் நீரழிவு நோய் உங்களை விட்டு ஓடி விடும்.

குறிப்பு : 
உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இந்த மருந்து சாப்பிடுவதற்க்கு முன்பும் பின்பும் பரிசோதனை செய்யுங்கள்.

Comments

Popular Posts