சிறுநீரக செயல்பாடு குறித்து கிரியேடினின் அளவு
*கிரியேட்டினின் என்னும் அலாரம்..!!*
உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றால், இரத்தத்தில் கிரியேட்டினின் எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறியும் பரிசோதனையை செய்யும்படியும் டாக்டர் பரிந்துரைப்பார். அந்த பரிசோதனைக்கான காரணம் என்ன என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.
*சிறுநீரகத்தின் செயல்பாடு அறிய உதவும்*
கிரியேட்டினின் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் சிறுநீரகம் சரியாக இயங்கிக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் ‘இன்டிகேட்டராக’ கிரியேட்டினின் அளவு இருக்கிறது. நமது கிட்னி சீராக இயங்கிக் கொண்டிருந்தால், இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு சரியாக இருக்கும்.
கிட்னியின் செயல்பாட்டில் ஏதாவது கோளாறு ஏற்படும்போது இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு உயர்ந்துவிடும். அதனால் கிரியேட்டினின் அளவு அதிகரிப்பது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கிறது.
*கிரியேட்டினின் வெளியேறாவிட்டால்*
√ உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய ஒருவகை கழிவின் பெயர்தான் கிரியேட்டினின். தசை செல்களின் சிதைவில் இருந்து இது உற்பத்தியாகிறது.
√ கிட்னி சீராக இயங்கினால், அதுவே இரத்தத்தில் இருந்து கிரியாட்டினை பிரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றும். இது இயல்பாக நடந்து கொண்டிருக்கும் போது இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு சீராக இருக்கும். இயல்பாக நடக்காவிட்டால் கிரியேட்டினின் அளவு உயர்ந்துவிடும்.
√ கிரியேட்டினின் 0.7 முதல் 1.4 மில்லி கிராம் வரை இருந்தால் அது சீரான அளவு. சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்போது அதன் அளவு அதிகரித்துவிடும். அசாதாரண அளவுக்கு அதிகரித்துவிட்டால், அது கிட்னி பழுதாகிவிட்டதன் அறிகுறியாக இருக்கும்.
அதனால்தான் சாதாரணமாக இரத்தத்தை பரிசோதிக்கும்போதெல்லாம் கிரியேட்டினின் அளவையும் பரிசோதிக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
√ உயர் இரத்த அழுத்தத்தை போன்று சிறுநீரக நோயும் நிசப்தமான கொலையாளியாக வர்ணிக்கப்படுகிறது. ஏன் என்றால் தொடக்க நிலையில் இது எந்த அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. சிறுநீரக பாதிப்பு ஒருவருக்கு ஏற்படுகிறதென்றால் தொடக்கத்திலே அதன் அறிகுறி எதையும் அவரால் உணரமுடியாது.
√ குழந்தைகளுக்கு 2.0 மில்லி கிராமுக்கு அதிகமாகவும், பெரியவர்களுக்கு 5.0 மில்லிகிராமுக்கு அதிகமாகவும் இருந்தால் அவர்களது கிட்னி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
*அறிகுறிகள்*
கிட்னியின் இயக்க செயல்பாடு குறையும் போது அதன் அறிகுறிகள் ஆளுக்கு ஆள் மாறுபடும்.
√ உடலில் தண்ணீர்த் தன்மை குறையும்.
√ சோர்வு, உடல் உறுப்புகளில் வீக்கம்.
√ பாதங்களிலும் முகத்திலும் நீர்கோர்த்தல்.
√ சுவாசிப்பதில் தடை ஏற்படுதல்.
√ சருமம் கடுமையாக உலர்ந்துபோகுதல்.
√ வாந்தி, தலைச்சுற்றுதல்.
போன்றவை இதன் பெரும்பாலான அறிகுறியாக இருக்கும்.
எந்த பிரச்சினையால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதித்திருந்தாலும் கிரியேட்டினின் அளவு அதிகரித்துவிடும். சிறுநீரக பாதிப்பு சமீபத்தில் ஏற்பட்டிருக்கிறதா? வெகுநாட்களாக இருந்து கொண்டிருக்கிறதா? என்பதை பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். பாதிப்பு சமீபத்தில் ஏற்பட்டிருந்தால் சிகிச்சை பெற்று அதில் இருந்து மீள்வது எளிது.
*காரணங்கள்*
* குறிப்பிட்ட சிலவகை மருந்துகளை உட்கொள்ளுதல், சிறுநீரக தொற்று, சிறுநீர் பாதையில் ஏற்படும் தடை, தசைகளில் அதிகமாக ஏற்படும் சிதைவு போன்றவைகளாலும் இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு அதிகரிக்கும்.
* தொடர்ச்சியாக அளவுக்கு அதிகமாக மாமிச உணவுகள் உட்கொண்டாலும் கிரியேட்டினின் அளவு கூடும்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இருப்பவர்களும் பரம்பரை வழியாக கிட்னி நோயால் பாதிக்கப்படுபவர்களும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை இரத்தத்தில் கிரியேட்டினின் அளவை பரிசோதிக்கவேண்டும்.
*இரத்தக் கிரியேட்டினின் அளவு*
√ ஆண்களுக்கு 0.7 - 1.4 மி.கி/.டெ.சி. லிட்டர்,
√ பெண்களுக்கு 0.6 - 1.3 மி.கி./டெ.லி.,
√ குழந்தைகளுக்கு 0.5 - 1.2 மி.கி./டெ.லி.,
என்று இருக்க வேண்டும். இதற்கு மேல் அளவுகள் அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கொள்ள வேண்டும்.
*உணவு முறை*
√ ஆரம்ப கட்ட சிறுநீரக செயலிழப்பில் (இரத்தத்தில் கிரியேட்டினின் 1.0-3.0 மி.கி) உணவு முறைகளில் பெரிய மாற்றம் இருக்காது. உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம், கை, கால்களில் நீர் கோர்ப்பு ஆகியன இருந்தால் உணவில் உப்பு, நீர் ஆகியன குறைக்க வேண்டும்.
√ இரண்டாம் கட்ட சிறுநீரக செயலிழப்பில் (இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 3.0-6.0)புரதச்சத்து உப்பு குறைந்த உணவுகள் பரிந்துரைக்கப்படும்.
* உங்களுடைய சிறுநீரின் அளவு மற்றும் இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவைப் பொறுத்து நீரின் அளவும், பொட்டாசியம் உள்ள உணவுகளின் அளவும் பரிந்துரைக்கப்படும்.
√ கடைசி நிலை சிறுநீரக செயலிழப்பில் (கிரியேட்டினின் அளவு 6 மி.கி.க்கு மேல்) பொதுவாக உப்பு, பொட்டாசியம், புரதம், குறைந்த உணவு பரிந்துரைக்கப்படும். இரத்தத்தில் கால்சியம், பாஸ்பரஸ், கொலெஸ்டிரால் இவற்றின் அளவைப் பொறுத்து அவற்றிக்கான உணவு ஆலோசனையும் வழங்கப்படும்.

Comments
Post a Comment