*வாய்வு உள்ளவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டியவை?*
உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகள், புரதம் மிகுந்த உளுந்து, முட்டை, மீன், இறைச்சி, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், வாதுமை, வெங்காயம், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், அப்பம், அடை, அப்பளம், வடாகம், ரொட்டி, ஊறுகாய், சோளப்பொரி, காபி, தேநீர். இவை தவிர உங்களுக்கு எந்த உணவு சாப்பிட்டால் வாய்வு தொல்லை தருவதாக நினைக்கிறீர்களோ அதையும் குறைத்துக் கொள்ளுங்கள். *வாய்வை உண்டாக்காத உணவுகள்* அரிசி, கம்பு, கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களில் தயாரிக்கப்பட்ட உணவுகள் (எடுத்துக்காட்டாக, இட்லி, இடியாப்பம், தோசை, புட்டு, ரவா உப்புமா, அரிசிச்சோறு, கம்பங்கூழ், கேப்பைக்கூழ், கேப்பைத் தோசை, சப்பாத்தி, கோதுமை தோசை). கேரட், பீட்ரூட், முள்ளங்கி, டர்னிப், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய், வெள்ளைப்பூண்டு, தக்காளி, பப்பாளி, எல்லா கீரைகள், புதினா, தேன், வெல்லம், சாம்பார், ரசம், மோர். இந்த உணவுகளைத் தேவையான அளவுக்குச் சாப்பிடலாம். *இரண்டு தவறான நம்பிக்கைகள்!* × ஒன்று, வாய்வு வெளியேற வேண்டுமானால் சோடா குடிக்க வேண்டும் என்று நினைப்பது. சோடா குடித்ததும் வயிற்றில் உள்ள வாயு வெளியேறி விடுவதாக நம்புகிறோம். இது தவறு. உண்மையில் சோடா குடித்ததும், சோடாவில் கலந்திருக்கும் கரியமில வாயுதான் ஏப்பமாக வெளியேறுகிறது. குடலில் உள்ள வாயு வெளியேறுவதில்லை. × இன்னொன்று, `ஆ.....வ்’ என்று பெரிய ஏப்பம் விட்டால் வாயு முழுமையாக வெளியே வந்துவிடும் என்று நம்பி பலர் தாங்களாகவே வலிய ஏப்பத்தை வரவழைப்பர். உண்மையில் அப்போது என்ன நிகழ்கிறது தெரியுமா? பெரிய ஏப்பம் விடும்போது வாயு வயிற்றுக்குள்தான் செல்கிறது. அடுத்தமுறை இப்படி நீங்களாகவே வலிய ஏப்பம் விடும்போது முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் நின்று கவனியுங்கள். உங்களுக்கே உண்மை புரியும். *வாய்வு தொல்லைக்கு இயற்கை மருத்துவம்* * பெருஞ்சீரகத்தை வெறுமனே வாயிலிட்டு மெல்ல உடனடி நிவாரணம் கிடைக்கும். அரை டீ ஸ்பூன் பெருஞ்சீரகத்தை 1 கப் சூடான வெந்நீரில் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி குடிக்கலாம். நாளொன்றுக்கு 3 கப் குடிக்கலாம். இது வாயு உருவாவதை தடுக்கும். * இளநீர் அருந்தலாம் இளநீரானது செரிமானத்தை அதிகரித்து உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நீக்குகிறது. இது இரைப்பைக் குழாயில் உள்ள வாயுவை வெளியேற்றுகிறது. * அன்றாட உணவில் தயிர் சேர்ப்பதன் மூலம் உடலில் நோயெதிர்ப்பு அதிகரிக்கும் ஆரோக்கியமான செரிமானத்திற்க்கு உதவுகிறது, வாயு பிரச்சினைகளையும் நீக்குகின்றன. * சூப் போடும் போது பூண்டு, கிராம்பு இரண்டையும் தட்டி சூப் போடலாம், குழம்பில் பூண்டு, கிராம்பு சேர்க்கவும். பூண்டு, கிராம்பு மட்டும் தட்டிப் போட்டு சூப் வைத்து ஒரு நாளைக்கு இருமுறை அல்லது மூன்று முறை குடிக்கவும். பூண்டு வாயு தொல்லையை போக்கும். * 4 - 5 பூண்டை அவித்து காலை உணவோடு சேர்த்து சாப்பிடலாம். * சீரகம் அரை தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு கப் சூடான வெந்நீரில் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி குடிக்கலாம். நாளொன்றுக்கு 3 கப் குடிக்கலாம். உணவைச் சாப்பிட்டபின் சிறுது சீரகத்தை மெல்லலாம். சீரக வாயு பிரச்சனைக்கு சிறந்த இயற்கை தீர்வு. * வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் கலந்து உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண்கள் ஆறும். * மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும். * சுக்கு மல்லி(தனியா) கசாயம் வாயுவை போக்கும். * பசும்பாலில் 10 பூண்டு பற்களை சேர்த்து காய்ச்சி குடித்தால் வாயு சேராது. * இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க அனைத்துவித வாயுக்கோளாறும் தீரும். * புதினாக்கீரையை நெய் விட்டு வதக்கி, இதனுடன் உப்பு, புளி, மிளகாய், தேங்காய் சேர்த்து துவையல் செய்து உணவுடன் சாப்பிட்டு வர வாயு அகலும். * வெந்தயக்கீரை, தூதுவளைக்கீரை, வள்ளக்கீரை, முடக்கத்தான்கீரை போன்ற கீரைகள் வாயுவைப் போக்கும். * சமைக்கும் போது இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பது வாயுவைக் குறைக்கும். * முடக்கற்றான் கீரையை கைப்பிடி அளவு 1 கோப்பை தண்ணீரில் வேக வைத்து அந்த சாற்றுடன் சிறிது விளக்கெண்ணை விட்டுப் பருக வயிற்றில் உள்ள வாயு வெளியேறும். * தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது. * இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும். * ஓமம், கடுக்காய், வால்மிளகு, வெள்ளைப் பூண்டு, மிளகு, சுண்டைக்காய், சாதிப் பத்திரி, வெங்காயம் போன்றவைகளும் வாயுவைப் போக்கும். *டாக்டரை ஆலோசனை செய்ய வேண்டிய நேரம்* ஒவ்வொரு நாளும் 10 மற்றும் 20 முறைகளுக்கு இடையில் வாயு வெளியேறுதல் மிகவும் சாதாரணமானது. வாயு தொல்லைக்கு எளிதான வீட்டு வைத்தியம் கொண்டு சிகிச்சையளிக்க முடியும். அப்படியில்லாமல், உங்கள் வழக்கமான வாயுவுடன் பின்வரும் சிக்கல்கள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்: 1. நீடித்த வயிற்று வலி2. குருதியுடன் மலம்3. மலத்தின் நிறம் அல்லது மலம் கழித்தல் இடைவெளி மாற்றம்4. எடை இழப்பு5. மார்பு வலி6. தொடர்ந்து அல்லது மீண்டும் மீண்டும் குமட்டல் அல்லது வாந்தியெடுத்தல். *முன்னோர் வைத்திய முறைகள்*

Comments
Post a Comment