பல்வேறு வகையான ரசங்கள்

*ஆரோக்கியம் தரும் பல்வேறு ரசங்கள்* 
*வெங்காய ரசம்* 

சின்ன வெங்காயத்தைப் பயன்படுத்தி இந்த ரசத்தை தயார் செய்யலாம். சளி, சைனஸ் பிரச்னை, வாயு  தொந்தரவு, எலும்பு வியாதி போன்றவற்றுக்கு இந்த ரசம் நல்லது. 

*பூண்டு ரசம்* 

இது ரத்த ஓட்டத்தை சீராக்கவும், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை சீராக வைக்கவும் உதவுவதோடு, வாயு தொந்தரவுகளைத் தடுக்கவும் உதவுகிறது.   

*மிளகு ரசம்* 

இது காய்ச்சல், சளி தொந்தரவு, ஒவ்வாமை மற்றும் உடல்வலி போன்ற பிரச்னைகளுக்கு நல்லது.  

*தக்காளி ரசம்* 

சுவை மிக்க இந்த ரசம் ஊட்டச்சத்து மிகுந்தது. சில மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது தக்காளி  சாப்பிடக் கூடாது என்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம். 

*கொத்தமல்லி ரசம்* 

இது உண்ட உணவின் சத்துக்களை நன்றாக கிரகிக்க வழிவகை செய்கிறது. இது புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு நல்லது. 

மேற்கண்ட ரசங்களைத் தவிர சில மூலிகைகள், பருப்பு வகைகள் மற்றும் பழங்களைப் பயன்படுத்தியும் ரசம் தயார் செய்யலாம். இதில் பயன்படுத்தப்படும் பொருளைப் பொறுத்து அதன் குணங்கள் மாறுபடுகின்றன. 

*கொள்ளு ரசம்* 

இது வறுத்த கொள்ளை கசாயம் வைத்து அல்லது கொள்ளுப்பருப்பை சேர்த்து தயார் செய்யப்படுகிறது. இது  பித்தப்பைக்கல், சிறுநீரகக்கல், அதிகக் கொழுப்பு போன்றவற்றிற்கு மிகவும் உகந்தது. உடல்சூடு மற்றும் வயிற்றில் எரிச்சல் உடையவர்கள் இந்த ரசத்தைத் தவிர்க்க வேண்டும்.  

*கொடும்புளி ரசம்* 

இது சாதாரண புளிக்குப் பதிலாக கொடும்புளியைப் பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறது. இது ரத்தத்தில்  வரையறுக்கப்பட்ட கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு உகந்தது. 

*தூதுவளை ரசம்* 

இது தூதுவளை இலையைக் கொண்டு கசாயம் உண்டாக்கியோ அல்லது இலையை ரசத்தில் கலந்து கொதிக்க வைத்தோ தயார் செய்யப்படுகிறது. இது சளி தொந்தரவுகளுக்கு உகந்தது. யாரெல்லாம் தூசி நிறைந்த இடங்களில்  பிரயாணம் செய்கிறார்களோ அவர்கள் அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டிய ரசம் இது.  

*முடக்கத்தான் ரசம்* 

இது முடக்கத்தான் இலையைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இது முடக்கு வாதத்திற்கு மிகவும் உகந்தது. 

*நெல்லிக்காய் ரசம்* 

இது நீரிழிவு மற்றும் கண் நோயாளிகளுக்கு மிக நல்லது. 

*அன்னாசிப்பழ ரசம்* 

இது தலைவலி உள்ளவர்களுக்கு நல்லது.  

*கண்டந்திப்பிலி ரசம்* 

இது உடல் வலிக்கு நல்ல நிவாரணியாக இருக்கிறது. 

*கொண்டைக்கடலை ரசம்* 

இது கறுப்பு கொண்டைக் கடலையை அவித்த தண்ணீரில் தயார் செய்யப்படுகிறது. இது ஊட்டச்சத்து மிக்க ஒரு ரசம். 

*எலுமிச்சை ரசம்* 

இது சாதாரண ரசத்தில் எலுமிச்சைச்சாறு கலந்து தயாரிக்கப்படுகிறது. இது உடல்சூடு, வாந்தி, குமட்டல்  போன்ற பிரச்னைகளுக்கு நல்லது.  

*முருங்கை ரசம்* 

இது முருங்கைக் கீரை மற்றும் அதன் தண்டுகளைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இது ரத்த சோகைக்கு  உகந்தது. 

*எலும்பு ரசம்* 

இது ஆட்டின் மார்புப் பகுதி எலும்பை இடித்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் தயார் செய்யப்படுகிறது. இது நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதனால் உடல் பலகீனமாக இருப்பவர்களுக்கும் நல்லது. 

*நண்டு ரசம்* 

இது உடல்வலி, காய்ச்சல், சளித் தொந்தரவுகளுக்கு நல்லது. 

Comments

Popular Posts