நிலக்கடலை

நிலக்கடலையை எப்படி சாப்பிட்டா என்ன பலன்?
ஊறவைத்து உண்ணுதல் : Acidity மற்றும் வாயு பிரச்னை உள்ளவர்கள் நிலக்கடலையை 6 முதல் 7 மணி நேரம் ஊறவைத்து சாப்பிடலாம். 

வேகவைத்து உண்ணுதல் : அதிகளவு வைட்டமின் மற்றும்  தாதுஉப்பு சத்துக்களை உடைய இந்தக் கடலையை வேகவைத்து சாப்பிடுவது நல்லது. வேக வைப்பதன் மூலம் இதன் தோலில் இருந்து நோய் எதிர்ப்புப்  பொருளான Anti-oxidant பெறப்படுகிறது. இதன் மூலம் வறுத்த கடலையில் உள்ளதைவிட 3 முதல் 4 மடங்கு அதிகளவு Anti-oxidant-ஐ நாம்  பெறலாம். 

வறுத்து உண்ணுதல் : கடலையை வறுத்தும் உண்ணலாம். வறுத்த கடலையானது நமது உடலின் கொலஸ்ட்ரால் அதிகமாவதைத் தடுக்கிறது. இதில் உள்ள  Monounsaturated மற்றும் Poly Unsaturated Fatty Acid ஆகியவை உடலின் கெட்ட கொழுப்பினைக் குறைக்கிறது. 28 கிராம் அளவு வறுத்த கடலையை  உட்கொள்ளும் போது நாம் 166 கலோரியைப் பெறலாம். 

பொரித்து உண்ணுதல் : நிலக்கடலையை எண்ணெயில் பொரித்தும் உண்ணலாம். பொரித்த  கடலையில் கலோரியானது 170-ஆக உள்ளது. தொடர்ச்சியாக பொரித்த கடலையை  உட்கொள்வதால் கொழுப்பு அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி கடலையோடு உப்பு சேர்த்து உண்ணும்போது சோடியம் அளவு அதிகரிக்கிறது. எனவே,  இதை இரத்த அழுத்தம், இரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. 

நிலக்கடலை உடலுக்கு நன்மை தரக்கூடியது தான் என்றாலும், அதிக அளவு உண்டால் பித்தத்தினை உண்டாக்கும். அதனோடு சிறிதளவு வெல்லம் சேர்த்து உண்பதால் பித்த குணம் நீக்கப்பட்டு சீர்செய்யப்படும்.
கடலையுடன் வெல்லம் சேர்க்கப்படும் போது இரும்புச்சத்து அதிகரிப்பதால் இரத்த சோகையைத் தவிர்க்கலாம். 

கடலை மிட்டாய் - இனி இதை கண்டா விடாதீங்க....!!

எல்லா இடங்களிலும், எல்லா பருவங்களிலும் கிடைக்கக் கூடியது கடலை மிட்டாய். சுவை அதிகம், விலை குறைவு என்பதால் இது பலருக்கும்  விருப்பமான தின்பண்டமாகவும் இருக்கிறது. வயது வித்தியாசமின்றி பலரையும் ரசித்து சுவைக்க வைப்பதும் கடலை மிட்டாயின் தனிச்சிறப்பு.  

கடலை மிட்டாயின் மருத்துவ சிறப்புகள் என்ன?

கடலைமிட்டாயின் மகத்துவம்  நிலக்கடலையும், மண்டை வெல்லமும் சேர்த்து இனிப்புச் சுவையுடையதாக தயார் செய்யப்படுவதுதான் கடலை மிட்டாய். இது பல சத்துக்களை  கொண்டுள்ள ஒரு சிறந்த மருத்துவ குணமுடைய தின்பண்டமாக திகழ்கிறது. 

பதப்படுத்திகள், சுவையூட்டிகள், நறுமணமூட்டிகள் என்று பல்வேறு வகையான  வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிற உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் தின்பண்டங்களைத் தவிர்த்து, நமது பாரம்பரிய  தின்பண்டமான சத்துமிக்க கடலை மிட்டாயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவதன் மூலம் மேற்சொன்ன நன்மைகளை  நாம் பெற முடியும். 

ஹெல்த்தி  கடலை மிட்டாய்... வீட்டிலேயே செய்யலாம்!

நிலக்கடலையை நன்கு வறுத்து, மொறுமொறுப்பாக எடுத்துக் கொண்டு அதன் தோலை நீக்கிக் கொள்ள வேண்டும். கடலை எவ்வளவு எடுத்துக் கொள்கிறோமோ அதே அளவு, வெல்லம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது உதாரணமாக 150 கிராம் கடலை  எடுத்தால் 150 கிராம் வெல்லம் எடுத்துக் கொள்ள வேண்டும். 

வெல்லத்தினை தண்ணீர் சேர்த்து காய்ச்சி நன்கு கிளற வேண்டும். தேவைக்கேற்ப நெய் சேர்த்துக் கொள்ளவும். வெல்லம் காய்ச்சும்போது அடுப்பினை  மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளவும். வெல்லப்பாகு கம்பிபதம் வரும் வரை காய்ச்சவும். பிறகு உடைத்த நிலக்கடலையை வெல்லப்பாகுடன் சேர்த்து, நெய் தடவிய தட்டு வடிவ பாத்திரத்தில் வைத்து சமன்படுத்தவும். பிறகு அதனை துண்டுகளாக வெட்டி எடுத்தால் சுவையான கடலை  மிட்டாய் சாப்பிடத் தயாராகிவிடும். வாசனையாக வேண்டுமென நினைத்தால் சிறிதளவு ஏலக்காய் சேர்த்துக் கொள்ளலாம். 

எது எப்படியோ, "நிலக்கடலை மிகுந்த ஆரோக்கியமான உணவுப்பொருள். எந்தவித பயமும் இன்றி, கடலை மிட்டாயாகவோ, வேகவைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம். பயப்படத் தேவையில்லை. இதனால், பல்வேறு நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்.

Comments

Popular Posts