மனித மூளை பற்றிய தகவல்கள்

*_மனித மூளை பற்றிய தகவல்கள் :_*

1. சராசரியாக மனித மூளையின் எடை 1.5 கிலோ கிராம் ஆகும்.

2. கிட்டத்தட்ட  25 வாட் வரை உங்களது மூளை மின்சாரத்தை உருவாக்கும் திறன் படைத்தது. குறைந்த வால்டேஜ் அளவுகொண்ட ஒரு எல்இடி பல்பை எரிய வைப்பதற்கு உங்களது மூளையை மின்சார சக்தியே போதும்!!

3. சாதாரணமாக நீங்கள் எப்பொழுதும் உபயோகப்படுத்தும் மனதை விட,உங்களது ஆழ்மனம் 30,000 மடங்கு சக்தி படைத்ததாகும்.

4. மூளையின் 75 சதவீத பகுதி  நீரால் ஆனது.

5. மனிதனின் மூளை 18 வயது வரை தான் வளர்ச்சி அடையும். அதன் பிறகு அதன் வளர்ச்சி நின்று விடும்.

6. பெண்களின் மூளையை விட ஆண்களின் மூளை 10% பெரிதாக இருக்கும்.

7. இரவில் தூங்கும் போது கூட உங்களது மூளை செயல்பட்டுக்கொண்டே தான் இருக்கும். நாம் இந்த உலகில் பிறந்த நொடியிலிருந்து மறையும் நொடிவரை தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் உறுப்பாக மூளை உள்ளது.

8. மனிதர்கள் அனைவருக்கும் கைவிரல் ரேகைகள் வித்தியாசமானதாக இருப்பது போலவே மனிதர்களின் மூளை செயல்பாடுகளும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு  விதமாக இருக்கும்.

9. மனித மூளையின் அளவு கடந்த 5000 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 9 கன அங்குலங்கள் குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

10. 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஆக்சிஜன் இல்லாமலேயே மூளையால் தாக்குப்பிடிக்க முடியும்.

11. மூளையில் உள்ள ரத்த குழாய்களின் அளவு சுமார் ஒரு லட்சம் மைல்கள் ஆகும் என்ற வியக்கத்தக்க மூளையைப் பற்றிய ஒரு சுவாரசியமான உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

12. கடல் உணவுகளை சாப்பிடுவது மூளையின் திறனை அதிகரிக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உங்களது ஞாபக சக்தியை நீங்கள் அதிகரிக்க விரும்பினால் கடல் உணவுகளை அவ்வப்போது சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

13. உங்கள் உடலின் 20% ரத்தம் மூளைக்கு செல்கிறது.

14. இதேபோலவே 20 சதவீத ஆக்சிஜனையும் உங்கள் மூளைதான் பயன்படுத்துகிறது.

15. ஒரு நாளைக்கு சுமார் 70,000 எண்ணங்கள் மனிதனின் மனசதில் வந்து செல்வதாக கூறப்படுகிறது.

16. இரவில் மனிதர்கள் காணும் கனவுகளில், சுமார் 90% கனவுகளை பகலில் கண்விழித்தபோது மறந்து விடுவார்கள். இதை நீங்களும் அனுபவித்து இருக்கிறீர்கள் தானே?!

17. இன்றைய அறிவியல் வளர்ச்சியால் உருவாக்கப்பட்ட கணினி கூட இறைவனால் படைக்கப்பட்ட நமது மூளைக்கு நிகராகாது.

18. மனிதர்கள் மூளையில் 10 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்ற ஒரு தகவல் பலராலும் பகிரப்படுகிறது. ஆனால் இது அறிவியலால் கூறப்படாத முற்றிலும் தவறான தகவலாகும்.  எனவே இதுவரைக்கும் நீங்களும் இந்த தகவலை உண்மை என்று நினைத்திருந்தால்,அது பொய்யான ஒரு வதந்தியே என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

19. பெருமூளை, சிறுமூளை, மூளைத் தண்டு ஆகிய மூன்றும் மூளையின மூன்று பகுதிகள் ஆகும். ஆங்கிலத்தில் இவை Cerebrub,Cerebellum,Brain stem என அழைக்கப்படுகின்றன.

20. உடலில் எந்தப் பகுதியில் அடிபட்டாலும் மூளை தான் நமக்கு வலி என்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்று உங்களுக்கே தெரியும். ஆனால் மூளைக்கு வலி என்ற உணர்வே என்பது ஒரு சுவாரசியமான உண்மையாகும்.

21. நமது மூளையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தகவல் பரிமாற்றமானது ஒரு நிமிடத்தில் 260 மைல்கள் வேதத்திற்கு இணையானது ஆகும்  என்ற வியக்கத்தக்க உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

🌷🌷

Comments

Popular Posts